கடந்த மாதம் 18ம் தேதி நெல்லையிலுள்ள தீயணைப்புத்துறை மண்டல அலுவலக துணை இயக்குனர் அலுவலகத்தில், அதன் துணை இயக்குனர் சரவணபாபு இல்லாத போது தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் ஏ.டி.எஸ்.பி. எஸ்கால் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், துணை இயக்குனரின் அலமாரியலிருந்து ரூ.2 லட்சத்து 25 ஆயிரம், மற்றும் அங்கிருந்த டிரைவர் செந்தில்குமாரிடமிருந்து ரூ.27 ஆயிரத்து 400 என மொத்தம் இரண்டரை லட்சத்தைப் பறிமுதல் செய்த லஞ்சம் ஒழிப்பு துறையினர் அது குறித்த வழக்கும் பதிவு செய்திருக்கிறார்கள்.

Advertisment

இதனிடையே, இந்த சோதனைக்கு முதல் நாள் நள்ளிரவில் பைக்கில் பையுடன் வந்த மர்ம நபர் ஒருவர், துணை இயக்குனர் அலுவலகத்திற்குள் சென்று சில நிமிடங்களில் வெளியேறியது அலுவலகத்தின் எதிரேயுள்ள வீட்டிலிருந்த சி.சி.டி.வி.யில் பதிவான காட்சிகள் வெளியேறி சூட்டைக் கிளப்பியது. இதனை தொடர்ந்து, தனது நேர்மையான நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களே தன்னைப் பழி வாங்கும் நோக்கில் இந்தச் சதிச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் எனத் துணை இயக்குனர் சரவணபாபு மாநகர போலீஸ் கமிசனர் சந்தோஷ் ஹதிமானியிடம் புகார் கொடுக்க, அதனடிப்படையில் நெல்லை மாநகர துணை கமிசனர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணையை மேற்கொண்டனர்.

Advertisment

t

அந்த விசாரணையின் போது, தீயணைப்புதுறை அலுவலகத்திற்கு வந்த போன் கால்களில் ஒருவரின் நம்பர் அடையாளம் கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து தனிப்படையினரின் விசாரணையில் தூத்துக்குடி தீயணைப்பு வீரர் ஆனந்த் மற்றும் அவருக்கு உதவிய அவரது உறவினர் முத்துச்சுடலை என்பது தெரியவர, அவர்களிருவரையும் கைது செய்திருக்கிறார்கள். பிடிபட்ட தீயணைப்பு வீரர் ஆனந்த்திடம் நடத்திய விசாரணையில், அவர் தகவலை மறைப்பதையும் எதற்காகவோ அச்சப்படுவதையும் போலீசார் அறிந்திருக்கிறார்கள். ஆனாலும் அலுவலகத்திற்குள்ளே சென்று பணம் வைத்தது யார் என்ற விபரம் பற்றி அறியமுடியவில்லை. மேலும் சி.சி.டி.வி. காட்சியில் வந்தவர் காக்கி பேண்ட் போட்டிருந்ததால் அவர் தீயணைப்புத்துறையைச் சார்ந்த ஒருவராக இருக்கலாம் என போலீஸ் டீமும் சந்தேப்பட்டு சிலரை தங்களின் ஷேடோவிற்குள் கொண்டு வந்தது.  

நடந்தவைகளை விரிவாக நம்மிடம் பேசிய அத்துறையின் அதிகாரி ஒருவர், தொடர்ந்து விசாரணையைத் திசை திருப்பும் வகையில் அவர் அவ்வாறு சென்றது தெரிய வந்திருக்கிறது. நடந்தவைகள் சதிச் செயலே என்று தெரியவர, தனிப்படையினர் பணம் வைத்த அந்த நபர் பற்றி தீவிரமாகத் தேடினர். அதில், சந்தேகப்பட்ட அவரின் செல்போன் சிக்னலை வைத்துக் கண்காணித்தபோது அந்த நபர் மும்பையிலுள்ள தாராவி பகுதியில் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்தே மும்பைப் பகுதிக்கு விரைந்த தனிப்படையினர், தாராவியில் பதுங்கியிருந்த மேலப்பாளையத்தைச் சேர்ந்த விஜய் என்ற வாலிபரை மடக்கிக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

Advertisment

t2

அவரிடம் நடந்திய விசாரணையில், அவர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்ட தீயணைப்பு வீரர் ஆனந்த்தின் நெருங்கிய உறவினர் என்பதும் தீயணைப்பு அலுவலகத்தில் பணம் வைப்பதற்காக 50 ஆயிரம் கூலி பேசப்பட்டதும் தெரியவந்தது. அதில் 40 ஆயிரம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதற்கான ஆதாரங்களைத் தனிப்படையினர் காட்டிய பிறகே நடந்த பின்னணிக் குற்றங்களை விஜய் ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அதை தொடர்ந்து அவர்களது விசாரணையில், இந்த சம்பவத்தில் தான் மட்டுமல்லாது நெல்லை தீயணைப்புத்துறையைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் சென்னை அம்பத்தூரிலுள்ள தீயணைப்புத்துறையின் முருகேஷ் இரண்டு வீரர்களின் தொடர்பு பற்றியும் அவர் தெரிவிக்க, அவர்களையும் தனிப்படை போலீஸ் தங்களின் கஸ்டடிக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

t3

சிறையிலிருக்கும் தீயணைப்பு வீரர் ஆனந்தை போலீஸ் காவலில் எடுத்து கூட்டாக விசாரிக்கும் பட்சத்தில் இந்தச் சதிச் செயலின் பின்னணி, பிறதொடர்புகள், அலுவலகச் சாவி கைமாறிய மர்மங்கள் விடுபடலாம் என்கிறார் அந்த விசாரணை அதிகாரி. தலை சுற்ற வைக்கிறது தீயணைப்புத்துறையில் புதைந்திருக்கிற மர்மங்கள்.