ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கனமழை காரணமாக பல இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது. தொடர் மழையால் கத்ரா பகுதியில் உள்ள வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி அருகே உள்ள குகை கோவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவர்கள் அனைவரும் பக்தர்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதால் உயிரிழப்பு மேலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டு தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.