ஹிமாச்சலில் நிலச்சரிவு ஏற்பட்டு 16 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் மழை பொழிந்து வரும் நிலையில் பிலாஸ்பூர் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் பேருந்து ஒன்று சிக்கியுள்ளது. 30 பேர் பயணம் செய்த பேருந்து நிலச்சரிவில் சிக்கியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 10 பேர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.இந்த  விபத்தில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்ற அடிப்படையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 'இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், நிவாரண அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார்.