நிலஅளவையர்லஞ்சம் பெற்றதற்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கரூர், புகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர்முன்னாள்டிஎன்பிஎல்காகித மில் உதவி மேலாளர், அவரது மனைவி மற்றும் மகன் பெயரில் வாங்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்ததன் பேரில், வீட்டுமனை தனிப்பட்டா வழங்க, ஏற்பாடு செய்ய திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நில அளவையராக பணிபுரியும் அருணை அணுகியபோது, அவர் ரூ.24,000/- லஞ்சம் கேட்டு, பின்னர் ரூ.9,000/- ஆக குறைத்து கேட்டுள்ளார்.
லஞ்சம் தர மறுப்பு தெரிவித்துராஜேந்திரன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில்புகார் கொடுத்துள்ளார். அவர் அளித்தபுகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது நில அளவையர் அருண் லஞ்சப்பணம் ரூ.9,000/-ஐ ராஜேந்திரனிடமிருந்து கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். இது தொடர்பாக திருச்சி, ஸ்ரீரங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.