Land bridges washed away on Kunri Hill Photograph: (erode)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கடம்பூர் அடுத்த குன்றி மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் மாதேஸ்வரன் தரைப்பள்ளம், மாமரத்து தரைப்பள்ளம் மற்றும் மூங்கிலத்தூர் தரைப்பள்ளம் ஆகிய மூன்று தரைப்பள்ளங்களில் கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் தரைப்பள்ளங்கள் அடித்துச் செல்லப்பட்டது.
இதனால் கடம்பூர்- குன்றி போக்குவரத்து தடைப்பட்டது, கிராமங்களின் அத்தியாவசிய தேவைகள் பாதிக்கப்பட்டது, அரசு பஸ் போக்குவரத்து முற்றிலும் 4 நாட்களுக்கு மேலாக தடைபட்டது.மாணவ- மாணவிகள், விவசாய வணிகர்கள் உள்ளிட்டோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.இந்த நிலையில், நேற்று குன்றி மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள மாதேஸ்வரன் தரைப்பள்ளம், மாமரத்து தரைப்பள்ளம் மற்றும் மூங்கில்தூர் தரைப்பள்ளம் ஆகிய மூன்று தரைபபள்ளங்களை கடம்பூர் வனத்துறையினர் மற்றும் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய பொறியியல் துறை (யூனியன் இன்ஜினியரிங்) அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
தரைப்பாலமாக கட்டுவதா, உயர்மட்ட பாலமாக கட்டுவதா? என்பதை எல்லாம் துறை சார்ந்த அதிகாரிகள் அளவீடு மற்றும் ஆய்வு செய்து விட்டுச் சென்றுள்ளனர்.
Follow Us