Lalu Prasad's daughter quits politics at Bihar election repercussions
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைத் தேசிய ஜனநாயக கூட்டணி தக்கவைத்து கொண்டது. அதாவது 101 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 89 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே போன்று 101 தொகுதிகளில் போட்டியிட்ட ஜே.டி.யூ. 85 இடங்களை கைப்பற்றியுள்ளது.
அதே சமயம், எதிர்க்கட்சியான மகாகத்பந்தன் கூட்டணியில் இடம்பெற்ற ராஷ்டிரிய ஜனதா தளம் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதோடு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து படுதோல்வி அடைந்தது.
பீகாரில் சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு தேவையான 122 இடங்களையும் தாண்டி தேசிய ஜனநாயகக் கூட்டணி 202 இடங்களைக் கைப்பற்றியிருந்து எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழ்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகாரின் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவின் மகள் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். லாலு பிரசாத் யாதவின் மகளான ரோஹின் ஆச்சாரியா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “நான் அரசியலை விட்டு விலகுகிறேன், என் குடும்பத்தையே துறக்கிறேன். சஞ்சய் யாதவும், ரமீஸ்வும் என்னிடம் இதைச் செய்யச் சொன்னார்கள். எல்லாப் பழிகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். தேஜஸ்வி யாதவின் நெருங்கிய நண்பரும், கட்சியின் மூத்த தலைவருமான சஞ்சய் யாதவ், தன்னை அரசியலில் இருந்து விலகுமாறு தேஜஸ்வி யாதவின் சகோதரி ரோஹினி தெரிவித்துள்ளது பீகார் அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us