Advertisment

லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்; புதிய கார் அறிமுகம்!

Car

 

டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் ஈவி சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கார் வாங்க பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது.

Advertisment

சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடமியில் முற்றிலும் புதிய ஹரியர் ஈவி இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் ஈவி  கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களை பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர்.

car2

முற்றிலும் புதிய ஹரியர் ஈவி  இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் கார் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 6.3 நொடிகளில் எட்டிவிடும். கரடு முரடான பாதையில் சீரான பயணத்தை உறுதி செய்ய ஏதுவாக இந்த காரில் ஆஃப்-ரோடு அசிஸ்ட் வழங்கப்பட்டுள்ளது.

Advertisment

டாடா ஹரியர் ஈவி  மாடல் Boost, Sport, City மற்றும் ECO என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இந்த காரில் வேரியண்டிற்கு ஏற்ப 65 கிலோவாட் ஹவர் மற்றும் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் ஆப்ஷன்களாக வழங்கப்படுகிறது. இவ்விரண்டிற்கும் வெவ்வேறு மைலேஜ்கள் அமைந்துள்ளது. இவற்றுடன் 7.2 கிலோவாட் AC ஃபாஸ்ட் சார்ஜிங் யூனிட் வழங்கப்படுகிறது.லக்ஷ்மி டாடா நிறுவனம் ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, ஈகாட்டுத்தாங்கள், வேளச்சேரி, ஓஎம்ஆர் ஆகிய ஆறு கிளைகளைகளையும், நான்கு சர்வீஸ் கிளைகளையும் கொண்டுள்ளது.

TATA Group car
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe