தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பயணிகள் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி செய்தியாளரிடம் கூறியதாவது, “கடந்த சில நாட்களாக சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகம் வசிக்கக்கூடிய கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தேன். அந்தப் பகுதிகளில் குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பல கிராமங்களில் திருக்கோவில் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களில் இரண்டு மூன்று விதமான தவறுகள் நடக்கிறது. பெரிய வசதி படைத்தவர்களில் பல நூறு ஏக்கர்களை ஆக்கிரமித்து இருப்பது என்பது ஒன்று. 

Advertisment

சில கிராமங்களில் குடியிருப்புகளுக்காகப் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் குழப்பக் கூடாது. கோயில் நிலங்களை மீட்டெடுக்கப்பட வேண்டும் அதே நேரத்தில் குடியிருப்பாகப் பயன்படுத்தி வரும் முறையாகச் சரியாக ஆய்வு செய்து அதற்குப் பிறகு தான் மக்களை வெளியேற்ற வேண்டும். எந்திரத்தினமாக கோயில் நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என எல்லோருக்கும் மாற்று இடங்களை ஏற்படும் செய்ய வேண்டும். அவர்களை அகற்ற வேண்டும் என்பது எளிதான காரியமல்ல. அதைச் செய்யக்கூடாது. அறநிலையத்துறைக்குச் சம்பந்தப்பட்ட ஐந்தரை லட்சம் ஏக்கர் ஆக்கிரமிப்பு உண்மை தான். ஆக்கிரமித்தவர்களின் உண்மையான பொருளாதார நிலை என்ன என்பதைக் கண்டறிந்து அதற்குப் பிறகு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சி அமைய வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சி தான் அமையும். 

krishnasaamy-our-1

கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது தான் புதிய தமிழக கட்சியின் முன்னெடுப்பாக உள்ளது. தனித்தொகுதி பொதுத் தொகுதி பாராமல் சமமாக எத்தனை தொகுதி ரிசர்வ் தொகுதி போட்டியிட்டிருக்கிறோமோ பொதுத் தொகுதியிலும் போட்டியிடுவோம். ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பெறக்கூடிய ஆட்சியை அமையும். தனித்துத் தான் ஆட்சி அமைப்போம் என்று சொன்னால் பஸ்ட் ரவுண்டில் அவுட் ஆகி விடுவார்கள். கூட்டணி ஆட்சி என்று சொன்னால் தான் களத்துக்குள்ளேயே வர முடியும் கள நிலவரம் சரியாக வரப் பொங்கலுக்குப் பிறகு தான் தெரியவரும். தமிழ்நாட்டில் 2026 இல் கூட்டணி ஆட்சி தான் மலரும். 2026இல் யாரெல்லாம் ஒருமித்து வருகிறார்கள் யாருக்கு அதற்கான தகுதி இருக்கிறது முறையாக ஆய்வு செய்து முடிவு எடுப்போம். இப்பொழுது கூட்டணியைப் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. 

விஜய் இப்பொழுது தான் தமிழ்நாட்டில் அரசியல் களத்தில் நிற்கிறார். ஃபர்ஸ்ட் ரவுண்டில் இருக்கிறார். இன்னும் பல ரவுண்டுகள் போக வேண்டி உள்ளது. தேர்தல் களத்தில் அவர் எப்படி இருக்கிறார். உறுதியான முடிவு என்ன எடுக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும். யாரையும் எதையும் நிராகரிக்க மாட்டோம். எல்லாவற்றையும் நாங்கள் கணக்கில் கொள்வோம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியில் பங்கு அல்லது இல்லை இரண்டே தரம் தான் கூட்டணி ஆட்சியில் பங்கு என்றால் அதுதான் கூட்டணி. பங்கு இல்லை என்றால் இரண்டாவது மூன்றாவது நான்காவது. அமைச்சரவையில் பங்கு என்பதுதான் ஆட்சியில் பங்கு என்பது. விஜய் பற்றி யாரையும் தனியாக விமர்சனம் செய்யக்கூடாது. 

Advertisment

krishnasaamy-our-2

கடந்த 60 வருஷம் திரை துறையில் பின்னணியில் இருந்து வந்தவர்கள் தான். விஜய்யை மட்டும் டார்கெட் செய்வது சரியானது அல்ல. திருக்கோவிலுக்குச் சொந்தமான நிலங்கள் வணிக பயன்பாட்டிற்கும், விவசாயப் பணிகளுக்கும் பயன்பெற்று வருகின்றன. இதில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் குடும்பங்கள் அங்கு வசித்து வருகின்றனர். கிராமங்களில் 90 சதவீதம் மக்கள் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கின்றனர். 100நாள் வேலை கூட முறையாகக் கொடுப்பதில்லை 30 நாட்களாக ஆக்கிவிட்டனர். குளங்கள் பராமரிப்பு கால்வாய் பராமரிப்பு விவசாய வேலைக்குப் பயன்படுத்தினார்கள் இப்பொழுது கம்ப்ளீட் ஆக எடுத்து அவர்களை வந்து நர்சரி கன்றுகளைப் பயிரிட அது மட்டும் தான் அதனால் 100 நாள் வேலை 30 நாளா ஆச்சு 20 நாளாயிற்று அப்புறம் 10 நாள் ஆகியிருக்கிறது. 

இப்படி வறுமையில் இருக்கும் போது நிலங்கள் மட்டும் ஜமீன்தார் முறைப்படி அவர்கள் கிட்ட இருக்கிறது அல்லது பெரியவர்கள் கிட்ட இருக்கிறது இல்ல கோவில் கிட்ட இருக்கிறது. நிலங்களுக்கான உண்மைத்தன்மையை கம்பிலிட்டா ஒரு வெள்ளை அறிக்கை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும். ஜமீன்கள் இந்த நிலங்களை வைச்சுருக்காங்க ஜமீன் ஒழிந்து பல வருஷங்கள் ஆகி மறுபடியும் எப்படி இருக்கிறது பினாமி நிலங்களை வைத்திருக்கிறார்களா அல்லது கள்ளத்தனமாக நிலம் வைத்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும்”என்றார்.