krishnagiri incident- Shocking confessions given by three Photograph: (police)
கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் இருவரும் மர்ம நபர்களால் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில் கொலைக்கான அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள். இவருடைய மகள் சுசிதா. பள்ளியில் பயின்று பயின்ற சுசிதா காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள் தாய் எல்லம்மாளையும், சுசிதாவையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி தங்கதுரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பாஞ்சாலியூர் பகுதியைச் சேர்ந்தவர் எல்லம்மாள். இவருடைய மகள் சுசிதா. பள்ளியில் பயின்று பயின்ற சுசிதா காலாண்டு தேர்வு முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி வீட்டிற்கு வந்த சில மர்ம நபர்கள் தாய் எல்லம்மாளையும், சுசிதாவையும் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்.பி தங்கதுரை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
Advertisment
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. எல்லம்மாள் அந்த பகுதியில் வட்டிக்கு பணம் கொடுத்து வந்த நிலையில் அது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
Advertisment
இந்த சம்பவத்தில் எல்லம்மாளிடம் வட்டிக்கு பணம் வாங்கிய சத்யராசு, நவீன்குமார் மற்றும் அவர்களுடைய கூட்டாளி ஹரிஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் குரும்பபட்டி அடுத்துள்ள மோட்டூர் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் தன்னுடைய நண்பர் சத்யராசிடம் அவசர தேவைக்காக பணம் வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கேட்டுள்ளார். உடனே நவீன்குமார், எல்லம்மாளிடம் அழைத்துச் சென்று பத்தாயிரம் ரூபாயை பத்து ரூபாய் வட்டிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.
முதல் மூன்று வாரங்களுக்கு பணத்தை செலுத்திய சத்திராசு பின்னர் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நவீன்குமார், சத்யராசு ஆகிய இருவரையும் தொடர்பு கொண்ட எல்லம்மாள் அவர்களிடம் தகாத முறையில் பேசி பணத்தை கொடுக்குமாறு சத்தம் போட்டுள்ளார். இந்நிலையில் ஆத்திரமடைந்த சத்யராசு, நவீன்குமார் ஆகிய இருவரும் எல்லம்மாளை கொலை செய்வதற்காக 25ஆம் தேதி இரவு 11 மணியளவில் மதுபோதையில் எல்லம்மாள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு கதவு மூடப்பட்டிருந்ததால் திரும்பி சென்றவர்கள் அடுத்த நாளான 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்றுள்ளனர். அப்பொழுதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் திரும்பி வந்துள்ளனர். பின்னர் அன்று மாலை நான்கு மணிக்கு மீண்டும் வீட்டிற்கு சென்ற நவீன்குமார், சத்யராசு மற்றும் ஹரிஸ் ஆகியோர் சோபாவில் உறங்கிக் கொண்டிருந்த எல்லம்மாளை கத்தியால் அறுத்துக் கொலை செய்தனர். அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி சுசிதா வெளியே வந்த நிலையில் அவரையும் வாயை மூடி கழுத்தை நெரித்து மூன்று பேரும் கொலை செய்து தெரியவந்துள்ளது.
கொலை செய்ததோடு மட்டுமல்லாமல் எல்லம்மாள் கழுத்தில் இருந்த இரண்டு செயின், வளையல், மோதிரம் மற்றும் வீட்டில் இருந்தால் 50 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றையும் மூன்று பேரும் திருடி சென்றுள்ளனர். தற்போது கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.