தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கூசாலிபட்டியைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவரது மனைவி 48 வயதான பாக்யலட்சுமி. ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் கடந்த 30.9.2018-ல் ஆடு மேய்க்க சென்றவர் இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர்.
அப்போது இலுப்பையூரணி கிராம கண்மாய் பகுதியில் மர்மமான முறையில் பாக்யலட்சுமி கொலை செய்யப்பட்டு பிறப்புறுப்பில் வெட்டு காயங்களுடன் நிர்வாணமாக கிடந்தார். தகவலறிந்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். சரிவர தடயங்கள் ஏதும் கிடைக்காமல் எட்டு ஆண்டுகளாக இந்த கொலை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் போலீசார் பரிதவித்து வந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கள் ஆல்பர்ட் ஜான், சிலம்பரசன் ஆகியோர் உத்தரவின் பேரில் டிஎஸ்பி ஜெகநாதன், இன்ஸ்பெக்டர் மாரியப்பன், எஸ்.ஐ. சண்முகம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீஸார் புதிய கோணங்களில் விசாரணையை கையாண்டனர்.
எஸ்.ஐ. சண்முகம் தலைமையிலான போலீஸ் டீம் சுவராஸ்யமாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் துப்பு துலக்கி விசாரித்ததில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் காவலாளியாக வேலை பார்த்து வந்த தாமஸ் நகரை சேர்ந்த 28 வயதான டேவிட் ராஜன், சென்னையில் பதுங்கி இருந்த லாரி டிரைவர் 24 வயதான சந்தோஷ் வேல்முருகன் ஆகியோர் பாக்ய லட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு கொலை செய்ததை கண்டுபிடித்தனர். அதை தொடர்ந்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட போலீசுக்கு தீராத தலைவலியாக இருந்த இந்த கொலை சம்பவம் குறித்து 8 ஆண்டுகளுக்கு பிறகு கொலையாளிகளை கைது செய்தது குறித்தும்... பிடிபட்டவர்கள் அளித்துள்ள வாக்குமூலம் குறித்தும் போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், கொலை நடந்த நாளன்று டேவிட் ராஜன், சந்தோஷ் வேல்முருகன் உட்பட நண்பர்கள் 4 பேர் கண்மாய் பகுதியில் உள்ள மரத்தடியில் மது அருந்தி விட்டு நிர்வாணமாக நின்று கும்மாளம் போட்டு குளித்துள்ளனர்.
அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பாக்யலட்சுமி, நான் ஒரு பொம்பளை இங்கே உட்கார்ந்து இருக்கேன். இப்படி அம்மணமா நிக்கிறீங்களேடா.... உங்களுக்கெல்லாம் மானம்ன்னு ஒன்னு இருக்கா இல்லையா.... என வாய்க்கு வந்தபடி பேசி சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டியுள்ளார். போதையில் இருந்த டேவிட் ராஜன் மற்றும் சந்தோஷ், வேல்முருகன் இருவரும் பாக்கியலட்சுமியை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இருள் சூழும் நேரம் வரை காத்திருந்து ஆள் நடமாட்டம் இல்லாத தருணத்தில் பாக்யலட்சுமியை மல்லுக்கட்டி அவரது ஆடைகளை அவிழ்த்து பிறப்புறுப்பில் கத்தியால் சரமாரியாக வெட்டி நிர்வாணமாக போட்டு விட்டு மீண்டும் கண்மாயில் குளித்துவிட்டு நிதானமாக தப்பி சென்றுள்ளனர். சம்பவம் நடைபெற்ற நாட்களில் விசாரணை நடத்திய போலீஸ் டீம் அப்போதே டேவிட் ராஜன் உள்ளிட்ட சிலரை கஸ்டடிக்குள் கொண்டு வந்து தங்கள் பாணியில் விசாரித்துள்ளனர்.
உயிரிழந்த பாக்கியலட்சுமியின் சமூகமும், சந்தேகத்தின் பேரில் பிடித்துக் கொண்டு வரப்பட்ட நபர்களும் கூர்மிகு வெவ்வேறு எதிரெதிர் சமூகம் என்பதாலும், அப்போது சிலர் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கியதால் அதை தவிர்க்கும் வகையில் போலீஸ் தரப்பு அப்போதைக்கு அமைதியாகி உள்ளனர். அதன் பிறகு போலீசார் இடம் மாறுதல் ஆகி சென்று விட்டதால் இந்த வழக்கை கண்டுபிடிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது.
இருப்பினும் சந்தேகத்துக்குரிய 4 பேரை மட்டும் குறி வைத்து தொடர்ந்து கண்காணித்து வந்தோம். இதில் எஸ்.ஐ சண்முகம் தலைமையிலான போலீஸ் டீம்க்கு, இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெற்ற பிறகு சென்னையில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட லாரி டிரைவரான சந்தோஷ் வேல் முருகன் மீது சந்தேகம் வலுக்கவே அவரை கண்டுபிடித்து ஸ்போர்ட்ஸ் நட்பு வட்டத்துக்குள் கொண்டு வந்து 6 மாதமாக சுவராஸ்யமாக பழகி பல கட்டங்களாக அவரது வாக்குமூலத்தை சேகரித்ததில் பாக்கியலட்சுமியுடன் தகராறு ஏற்பட்டதை உறுதி செய்தனர். அந்த வாக்கு மூல வீடியோவை சந்தோஷ் வேல்முருகனின் கூட்டாளி டேவிட் ராஜனிடம் பிட்டு பிட்டாக போட்டு காண்பித்த போது ஷாக் ஆன டேவிட் ராஜன் முழு உண்மையையும் பதட்டம் ஏதும் இல்லாமல் நிதானமாகச் சொல்லி இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு விட்டார் என தெரிவித்தனர்.
8 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சென்சிடிவ்வான இந்த கொலை சம்பவத்தில் அறிவுபூர்வமாகவும் திறமையாகவும் துப்புத் துலக்கி போலீஸ் டிபார்ட்மெண்டுக்கு தண்ணி காட்டிய குற்றவாளிகள் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்திருப்பது காவல்துறைக்கு பெருமையையும் மதிப்பையும் உயர்த்தியுள்ளது.
-செய்தியாளர் : மூர்த்தி
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/09/3q-2026-02-09-12-49-11.jpg)