சென்னை கீழ்ப்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு திவ்யா என்பவர் 2ஆம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இதன் காரணமாக டி.பி.சத்திரம் பகுதியில் அறை எடுத்துத் தங்கி கல்லூரிக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் திவ்யா அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

Advertisment

பணிச்சுமையும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மாணவி திவ்யா தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

அரசு மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த சம்பவம் சக மாணவர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் தற்கொலை செய்து கொண்ட மாணவி திவ்யா கல்லூரி மாணவர் ஒருவரை 3 ஆண்டுகளாக காதலித்து வந்த‌தும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.