Khushbu criticises tvk leader Vijay
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் தலைமை அலுவலகமான பனையூரில் கடந்த 2ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழாவின் போது பாடகர் வேல்முருகன், “தளபதி வாழ்க தளபதி வாழ்க...” என்ற பாடலை பாடினார். அதனை தொடர்ந்து வேல்முருகன் வேண்டுகோளுக்கு இணைங்க வேல்முருகன் மற்றும் அவரது மகளுடன் சேர்ந்து விஜய் சிறிது நேரம் நடனம் ஆடினார்.
இந்த விழாவில், தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். மேலும், பா.ஜ.க தலைமையில் மற்றும் பலர் கூறி என்று அதிமுக பெயரை சொல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணியை விமர்சித்தார். கட்சி தொடக்க விழாவில் பாடலுக்கு ஆடியதும், திமுக அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்ததும் குறித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விஜய்யை மக்கள் இன்னும் நடிகராகவே பார்க்கிறார்கள் என்று பா.ஜ.க மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குஷ்பு, விஜய் குறித்து பேசுகையில், “ மேடை நாகரிகம் ஒன்று இருக்கிறது. நீங்கள் சாதரணமாக மேடையில் ஹீரோ மாதிரி டான்ஸ் ஆடினீர்கள் என்றால் அது வேறு மாதிரி போகும். அதில் விஜய்யுடைய ஸ்டைல் இருக்கிறது. விஜய் என்னதான் ஒரு தலைவராக இருந்தாலும், அவர் ஒரு நடிகர், மிகப்பெரிய டான்சர் என்று தான் மக்கள் இன்னும் பார்க்கிறார்கள்” என்று கூறினார்.
Follow Us