திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே உள்ள கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் முஸ்தபா. இவரின் மகன் கலீல் ரகுமான். ஐம்பது வயதான இவர், அந்த பகுதியில் உள்ள  வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். பின்னர், அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் ஆபாசமான மற்றும் அருவருப்பான வார்த்தைகளையும் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல், அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாகவும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். 

Advertisment

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார்.  அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்து கொண்ட இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் நடந்த குற்றச் சம்பவம் குறித்து தகவல்களைக் கேட்டறிந்தனர். 

Advertisment

பின்னர் புகாரின் அடிப்படையில், பாளையங்கோட்டை காவல்துறையினர் தகுந்த சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.