திமுக நிர்வாகி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கல்வராயன் மலை கீழ்நாடு ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராங்காட்டை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் திமுகவின் கிளைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இத்தகைய சூழலில் நேற்று இரவு தனது மனைவி சரிதாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மர்ம நபர்களால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதில் ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Advertisment

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரியக்கோவில் காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக இது தொடர்பாக இரண்டு பேரிடம் விசாரணையானது நடத்தப்பட்டு வந்தது. அதே சமயம் ராஜேந்திரனுக்கும், ராஜமாணிக்கம் என்ற அவரது உறவினருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளதாகவும் அதன் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் காட்டுப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரிடம் இந்த நாட்டுத் துப்பாக்கி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

Advertisment