Advertisment

கேரளாவில் க@சாவிற்கு அதிக லாபம்; கடத்தலில் சிக்கிய வாலிபரின் பரபரப்பு வாக்குமூலம்!

2

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின்பேரில் சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் செங்கோட்டுவேலன் மேற் பார்வையில் போதை தடுப்பு சம்பந்தமாக  கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் பேரில் சங்கரன்கோவில் டவுண் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலகணேசன் மற்றும் காவலர்கள் முத்துராஜ், அமல்ராஜ், மாரிசாமி ஆகியோர்கள் சங்கரன்கோவில் ரயில் நிலையம் அருகில் வாகன தணிக்கையிலிருந்தனர். 

Advertisment

அப்போது திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் இளையராஜா (20) என்பவர் அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்திருக்கிறார் அவரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் இருந்து இரண்டு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய போலீசாரின் விசாரணையில், கேரளாவிற்கு கொண்டு சென்று அதனை விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்பதற்காக கேரளா கொண்டு செல்ல வைத்திருந்தாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து சங்கரன்கோவில் டவுண் போலீசார் இளையராஜாவை கைது செய்து. வழக்குப் பதிவு செய்தவர்கள் அவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். வாலிபரின் அதிரடி வாக்குமூலம் அந்தப் பகுதியில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.

Advertisment

crime police thenkasi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe