Advertisment

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் கே.சி. வேணுகோபால் கருத்துக் கேட்பு; கூட்டணி குறித்து வெளியாகும் முக்கியத் தகவல்?

sathyamoorthy-bhavan-ragul-karge-kc-venu

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. 

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், தொகுதி பங்கீடு குறித்து பேசுவதற்காக சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை கடந்த 22ஆம் தேதி சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனையில், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை கே.சி. வேணுகோபால் வழங்கியதாகவும், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் அவர் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது. 

Advertisment

இத்தகைய சூழலில் தான் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்து தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நேற்று  முன்தினம் (02.03.2026) நடைபெற்றது. இந்நிலையில் தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாத நிலையில், கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காகக் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனித்தனியாகக் கருத்துக்களைக் கேட்டறிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

congress--3m-team

அதில் பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவுடனே கூட்டணியைத் தொடர வேண்டும் எனக் கருத்து தெரிவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கருத்துக்களைக் கேட்ட பின்னர் காங்கிரஸ் கட்சியானது, திமுக கூட்டணியில் தொடர்வது குறித்து இன்று (02.03.2026) இறுதி முடிவெடுப்பதற்கு அக்கட்சி முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்றொருபுறம் அதிகாரப்பூர்வமாக திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவும், காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட அதே எண்ணிக்கையிலான தொகுதிகளை மட்டும் காங்கிரஸுக்கு திமுக ஒதுக்க முன்வந்ததாகக் கூறப்பட்டது. 

அதாவது திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட புதிய கட்சிகள் இணைந்ததையடுத்து கூடுதல் இடங்களை ஒதுக்குவதில் உள்ள சிரமத்தையும் திமுகவின் விளக்கி உள்ளனர். அதோடு மாநிலங்களவைக்கு ஒரு இடம் தருவதற்கு திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதே சமயம்  திமுக கூட்டணியில் 25 தொகுதிகள் மட்டும்தான் ஒதுக்க முடியும் என்பதை ஏற்க முடியாது என கிரிஷ் ஜோடங்கர் ஏற்கனவே செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

dmk kc venugopal Alliance Assembly Election 2026 CONGRESS MLA congress
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe