தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் கவின். இவர் சென்னையில் உள்ள பிரபல ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இத்தகைய சூழலில் தான் இவர் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார். அச்சமயத்தில் தன்னுடைய தாத்தாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவரை பாளையங்கோட்டை கே.டி.சி நகர்ப் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு கடந்த 27ஆம் தேதி (27.072025) அழைத்து வந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் கவினைச் சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த சுர்ஜித் என்ற இளைஞர் தான் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது என்பது தெரியவந்தது. இதையடுத்து சுர்ஜித்தைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதில் உயிரிழந்த கவினும், சுஜித்தின் சகோதரியும் பள்ளி காலத்தில் இருந்தே நண்பர்களாகப் பழகி வந்துள்ளனர். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த கவின், தனது சகோதரியிடம் பழகுவது சுர்ஜித்துக்கும், காவல்துறையில் உதவி ஆய்வாளர்களாகப் பணியாற்றி வரும் சுஜித்தின் தாய் மற்றும் தந்தை ஆகியோருக்கும் பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக சுஜித், கவினைக் கொலை செய்திருக்கிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கவின் ஆணவக் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் கவின் கொலை வழக்கு தொடர்பாக தலைமைறைவாக இருந்த சுர்ஜித்தின் தந்தையும், காவல் ஆய்வாளருமான சரவணனை போலீசார் கைது செய்யப்பட்டார். இத்தகைய சூழலில் தான் கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் 4வது நாளாக இன்றும் (31.07.2025) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கவின் ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து சுர்ஜித்தின் சகோதரி சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நானும் கவினும் ரொம்ப உண்மையாக காதலித்தோம். கொஞ்சம் செட்டிலாக டைம் தேவைப்பட்டது. கடந்த மே மாதம் 30ஆம் தேதி சுஜித்தும் கவினும் பேசிகொண்டார்கள். அப்போது அந்த நேரத்தில் அப்பாகிட்ட சுஜித் சொல்லிட்டான். அதனால் அப்பா வந்து இந்த மாதிரி லவ் பண்றியான்னு என்கிட்ட கேட்டபோது , இல்லப்பா நான் லவ் பண்ணல அப்படின்னு சொல்லிட்டேன். ஏனென்றால் கவின் என்கிட்ட டைம் கேட்டிருந்தான். இன்னொரு 6 மாதம் கழித்து சொல்லு ப்ளீஸ் அப்படின்னு சொல்லிட்டு இருந்தான். அதனால நான் அப்பாகிட்ட அன்னைக்கு சொல்லவில்லை.
அதுக்குள்ள அடுத்து வந்த மாதத்தில் இப்படி ஆயிடுச்சு. 2 பேருக்குள்ள என்ன உரையாடல் நட்ந்தது குறித்து தெளிவாக தெரியாது. ஆனால் கவினுக்கு போன் பண்ணி சுஜித் வந்துட்டு பொண்ணு கேட்க வாங்க .இவ (சுபாஷினி) மேரேஜ் மூவ் பண்ணாதான் அடுத்து என்னோட ப்ரொபஷன பார்க்க முடியும் அப்படின்னு சொன்னான். அப்படிங்கறது எனக்கு தெரியும். கடந்த 27ஆம் தேதி என்ன நடந்துச்சு அப்படின்னா அன்னைக்கு கவின் வராங்கறது எனக்கு தெரியாது. நான் 28ஆம் தேதி தான் வர சொல்லிருந்தேன். அவங்க தாத்தாவுக்கு தலையில சூச்சர்ஸ் இருந்ததால் நான் வந்துட்டு ரூம் பாத்துட்டு அட்மிட் பண்ணனும்னு யோசிச்சிருந்தேன்.
அப்போ மதியமாக மங்கம்மாள் சாலை கிட்ட வந்து நின்னுட்டுதான், எனக்கு தெரியவே செய்யும். அவங்க வந்துருக்காங்கன்னு சொல்லிட்டு.நேராக அவங்களை நான் ஐபிக்கு (உள்நோயளிகள் பிரிவுக்கு) கூட்டிட்டு போயிட்டேன். அப்போது கவின் உள்ளே வந்தான். இருந்தாலும் அவங்க அம்மா கிட்டயும், மாமாகிட்டயும் மட்டும் தான் பேசிட்டு இருந்தேன். பேசிட்டே அப்படியே கவின் வெளிய போயிட்டான். அங்க இருந்து கிளம்புற அப்பதான் அவங்க அம்மா அம்மாவும், அம்மாவும் கிளம்புறப்பதான் கவின் எங்க அப்படிங்கறதையே நாங்க யோசிச்சோம். நான் சிசிக்சைக்கான நடைமுறை குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தேன். அப்ப யோசிச்சிட்டு, நான் வந்துட்டு சொன்னேன். அவங்க அம்மா வந்துட்டு கால் பண்ணாங்க.
அவன் எடுக்கவில்லை. நானும் கால் பண்ணி எடுக்கவில்லை. நீங்க வேணா பசிக்குதுன்னு சொன்னாங்க. உங்க அம்மா சாப்பிட போங்க. நான் வேணா வர சொல்றேன்னு சொல்லிருந்தேன். அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சு. தேவை இல்லாமல் இஷ்டத்துக்கு யாரும் வதந்தியை கிளப்பவேண்டாம். உங்களுக்கு தோன்றியது எல்லாத்தையும் பேசாதீங்க. எங்க அப்பா அம்மாக்கு இதில் எந்த சம்பந்தமுமே கிடையாது. அவங்களுக்கு தெரியாது. இதை இதோட விட்டுருங்க. எனக்கும் கவினுக்கும் என்ன நடந்ததுன்னு எனக்கும் அவனுக்கும் மட்டும் தான் தெரியும். எங்க ரிலேஷன்ஷிப் பத்தியோ, எங்க ரெண்டு பேரை பத்தியோ இனி யாருமே தப்பா பேச வேண்டாம். யாருக்குமே எதுவுமே தெரியாது. உண்மை தெரியாம எல்லாரும் நிறைய பேச வேண்டாம்.
எங்க அப்பா அம்மாக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது. அவங்கள பனிஷ் பண்ணனும்னு நினைக்கிறது தப்பு. அவங்கள விட்டுருங்க. இவ்வளவு சிச்சுவேஷன்ல எல்லாரும் அவங்கவங்களுக்கு என்ன தோணுதோ அத எல்லாமே பேசிட்டீங்க என்னோட பிலிங்ஸ் என்ன நான் என்ன நினைக்கிறேன் அப்படிங்கறத ரெஸ்பெக்ட் பண்ணி ஒரே ஒரு பொண்ணு மட்டும் என்ன பத்திபேசி இருக்காங்க அவங்களுக்கு மட்டும் ரொம்ப தேங்க்ஸ்” எனத் தெரிவித்துள்ளார்.