தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று (27-09-25) மூன்றாவது கட்டமாக நாமக்கல் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பை நடத்தினார். நாமக்கல்லில் பரப்புரையை முடித்துக் கொண்டு பிரச்சார வாகனத்தில் சாலை மார்க்கமாக விஜய், கரூருக்கு சென்றார். அப்போது விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்துள்ளனர். விஜய் பேசிவிட்டு அங்கிருந்து சென்ற பின்பு, கூட்டம் கலைந்த போது தான் குழந்தைகள், பெண்கள் என 20க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்திருந்தது தெரியவந்தாகக் கூறப்படுகிறது. உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

இந்த சம்பவத்தில், 35க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் 2 குழந்தைகள் உள்பட 20க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரேத பரிசோதனை அறைக்கு எடுத்துச் செல்லப்படும் உடல்களை கண்டு உறவினர்கள் கதறி அழுவது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள 04324 259306, 7010806322 (வாட்ஸ் அப்)  உதவி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் உயிரிழந்து கிடந்த சின்ன சிறு குழந்தைகளை பார்த்து எல்லாம் சின்ன பிள்ளைகள் எனக்கதறி அழுதார். படிச்சு படிச்சு சொன்னாங்க ரூல்ஸ ஃபாலோ ஃபாலோ பண்ணுங்கடா.. ஃபாலோ பண்ணுங்கடா என கதறி அழுதது. சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் மருத்துவமனைகளில் குழந்தைகளை இழந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர். 40 பேர் உள்நோயாளிகளாகவும், 11 பேர் புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisment