கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி (27.09.2025) த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 13ஆம் தேதி (13.10.2025) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான கரூர் சுற்றலா மாளிகையில் தற்காலிகமாகச் சிபி.ஐ.யின் விசாரணை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் 12 பேர் கொண்ட சி.பி.ஐ. குழுவினர் கரூரில் தங்கி இந்த வழக்கைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் த.வெ.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (02.12.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை ரத்து செய்துவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் மீண்டும் விசாரணையை ஒப்படைக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் விசாரணையையும் மீண்டும் தொடரும் வகையில் அதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீக்க வேண்டும்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/02/tn-sec-2025-12-02-12-52-47.jpg)
மாநில அரசானது தன்னுடைய சட்டப்பூர்வமான அதிகாரத்தின் அடிப்படையிலே இந்த ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்திருந்தது. தமிழ்நாடு காவல் துறையின் விசாரணை சரியான திசையில் தான் சென்று கொண்டிருந்தன. எனவே தான் சென்னை உயர்நீதிமன்றம் மூத்த அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குழு சுதந்திரமாக விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது அதற்கு அந்த தடை விதிக்கும் விதமாகத் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடை உத்தரவை நீக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/02/sc-tn-govt-2025-12-02-12-52-17.jpg)