சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சென்னை உயர்நீதிமன்றத்தில் விசிக வினரால் தாக்கப்பட்ட வழக்கறிஞர், நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும். வழக்கறிஞர் தரப்பில் நியாயம் இருந்தால், அவர் எதிர்பார்த்த தீர்ப்பு வரும். இந்த வழக்கில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு உள்நோக்கம் இருப்பதாக சந்தேகங்கள் இருந்தால், நீதிமன்றத்தில் தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும்” என்றார். 

Advertisment

மேலும், ‘இருமல் மருந்து சாப்பிட்டு 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இந்த மருந்து எங்கிருந்து வந்தது என்பதை விசாரணை செய்ய வேண்டும். தமிழகத்தில் இந்த இருமல் மருந்து வந்திருந்தால், தமிழக அரசும், துறை அதிகாரிகளும் பதில் சொல்லியே ஆக வேண்டும். தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும்” என்றார். 

Advertisment

தொடர்ந்து, “கரூர் துயர சம்பவத்திற்கு தவெக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, என்ன நடந்தது என்ற விளக்கத்தை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் கூறினார். 1984-இல் Blue Star ஆபரேஷனைத் தொடர்ந்து Black Thunder ஆபரேஷன் நடந்தது. சரித்திரம் தெரிந்தவர்கள் இரு ஆபரேஷன்களுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்திருப்பார்கள் என்றவர், விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற காரைக்குடிக்கு இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வரும் நயினார் நாகேந்திரன், விருந்து உண்டு பத்திரமாகச் செல்ல வேண்டும்” என்று கூறினார். 

நெல்லைக் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமானவர்களை அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். நெல்லைப் பகுதியில் கூலிப்படையினர் அதிகம் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைக் காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்று கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.

Advertisment