Advertisment

காவலர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கர்நாடக அரசு

780

Karnataka government gives a pleasant surprise to policemen Photograph: (KARNATAKA)

பிறந்த நாள், திருமண நாளில் கட்டாயம் காவலர்கள் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என  கர்நாடக மாநில அரசு முடிவெடுத்து உத்தரவிட்டுள்ளது.

Advertisment

இரவு பகல் பாராமல் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக வேலை செய்து வரும் காவலர்கள் மன அழுத்தத்திற்கு மத்தியிலேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவலர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் முக்கிய தினங்களை கொண்டாட முடியாத நிலை இருக்கிறது. எனவே அவர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையிலும், அதேபோல காவலர்களுக்கும் குடும்ப உறவுகள் உண்டு அதனால் அவர்களும் தங்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என கர்நாடக காவல்துறை புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. 

Advertisment

அதன்படி கர்நாடக மாநில காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் தங்களுடைய பிறந்தநாள் மற்றும் திருமண நாளில் கட்டாயமாக விடுப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில டிஜிபி சலீம் வெளியிட்டுள்ளார்.

ANNOUNCED karnaraka police police station
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe