கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவர், கர்ப்பிணி வனத்துறை அதிகாரியை பாலியல் ரீதியாக பேசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கர்நாடகா மாநிலம், சன்னகிரியில் காலாண்டு கர்நாடகா மேம்பாட்டுத் திட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ சன்னகிரியைச் சேர்ந்த சிவகங்கா பசவராஜ் கலந்து கொண்டார். அங்கு ஒரு பெண் வனத்துறை அதிகாரி, தனது கர்ப்பத்தைக் காரணம் காட்டி வரவில்லை. இதனை அறிந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவகங்கா பசவராஜ், அதிகாரிக்கு எதிராக பாலியல் ரீதியான கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

Advertisment

இது தொடர்பாக அவர், “அவர் கர்ப்பமாக இருந்தால் விடுப்பு எடுக்க வேண்டும். ஏன் வேலைக்கு வர வேண்டும்? லஞ்சம் வாங்க வேலைக்கு வருகிறாரா? அவருக்கு வெட்கமாக இல்லையா?” என்று கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பி, உயர் அதிகாரிகளிடம் இந்த விஷயம் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி சிவகங்கா பசவராஜ் உத்தரவிட்டார். கர்ப்பிணி அதிகாரிக்கு எதிராக எம்.எல்.ஏ சிவகங்கா பசவராஜ் பாலியல் ரீதியாக பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பசவராஜுக்கு எதிராக பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.