உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ் ஆவார். இவரது சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் சென்னையில் புதிதாக உருவச் சிலை நிறுவப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டும் ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி (03.04.2025) அன்று சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் அறிவித்தார்.
இதனையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியக வளாகத்தில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் முகப்பில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூபாய் 85 இலட்சம் மதிப்பீட்டில் கார்ல் மார்க்ஸ் சிலை புதிதாக நிறுவப்பட்டது. இந்நிலையில் இந்த உருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (06.02.2026) திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சியில் காரல் மார்க்ஸ் குறித்து காணொலிக் காட்சி திரையிடப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/karl-marx-statue-2026-02-06-11-41-56.jpg)
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மு.பெ. சாமிநாதன், எ.வ. வேலு, மா.சுப்பிரமணியன், நாசர், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப் பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு, சென்னை மேயர் பிரியா ராஜன், முத்த பத்திரிக்கையாளர் என். ராம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Follow Us