Advertisment

“இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது” - கனிமொழி எம்.பி. வேதனை!

kanimozhi-mp-mic

சென்னை தரமணியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கட்டிட பணிகள்  நடைபெற்று வருகின்றன. இந்த பணி நடைபெறும் பகுதியில் பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். அவர், தனது மனைவி மற்றும் இரண்டு வயதுக் குழந்தை என குடும்பத்துடன் வசித்து வந்தார். இத்தகைய சூழலில் தான், அந்த பகுதிக்கு வந்த கும்பல் ஒன்று அவரது மனைவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. இதனைத் தடுக்க முயன்ற அவரை அந்த கும்பல் கொலை செய்துள்ளது. 

Advertisment

மேலும், அவரது மனைவி மற்றும் குழந்தை என மொத்த குடும்பத்தையும் அந்த கும்பல் கொலை செய்துவிட்டு, பின்னர் அந்த சடலங்களை வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக வீசி சென்றது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு குப்பைப் பகுதியிலிருந்து ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த சடலம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆராயப்பட்டு, அதனடிப்படையில் சந்தேகத்திற்குரிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் சடலமானது கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மனைவியின் சடலத்தை  தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

மற்றொருபுறம்தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பிடிக்கும் பணியை போலீசார் தீவிரப்படுத்தினர். இதனையடுத்து இந்த கொலை சம்பவம் தொடர்பாக பிகாரை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் சிலரிடம் அடையார் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிக்கந்தர் (33), நரேந்திர குமார்( 45), நவீந்திரநாத் (45), பிகாத் (24) உள்ளிட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

inves-1

இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை தரமணி பகுதியில் வடமாநில இளைஞரையும் அவரது மனைவி மற்றும் குழந்தையையும் சமூகவிரோதிகள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் தருகிறது. கொலை செய்யப்பட்ட அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. காவல்துறையினர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். இக்கொடுஞ்செயலில் ஈடுபட்டவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Adayar Investigation police taramani kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe