Advertisment

“மாநிலத்திற்கு ஆளுநர் பதவியே வேண்டாம்” - கனிமொழி எம்.பி. சுளீர் பேச்சு!

delda-dmk-kanimozhi

தஞ்சை மாவட்டம், செங்கிப்பட்டியில் ‘வெல்லும் தமிழ்ப்_பெண்கள்’ என்ற தலைப்பில் திமுகவின் டெல்டா மண்டல மகளிரணி மாநாடு இன்று (26.01.2026) நடைபெற்றது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ்நாட்டில் (ஆளுநர் ஆர்.என். ரவி) ஒருத்தர் இருக்கிறார். அவருக்கு குடியரசு என்றால் என்னவென்று தெரியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை  ஏன் அழைத்து அங்கே பேச வைக்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் வேறு வழி இல்லை. ஒருவேளை சட்டமன்றத்தில் பொழுது போகுதோ என்னமோ தெரியவில்லை. ஆனால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுமையாக சகித்து கொண்டிருக்கிறார். 

Advertisment

ஒவ்வொரு ஆண்டும் வருகிறார். சட்டமன்றத்திலே கொடுக்கப்படக்கூடிய, வாசிக்க வேண்டிய தமிழ்நாடுடைய உரையை படிக்க மாட்டார். படிக்க மாட்டேன் அப்படி என்று ஏதாவது ஒரு காரணம் கூறுகிறார்.  இது சரியில்லை. அது சரியில்லை தேசிய கீதத்தை பாடவில்லை என்று கூறுகிறார்.  ஏன் வருகிறார். தேசிய கீதத்தை  பாட மாட்டார்கள் என்று தெரியும். நான் வரவில்லை என்றும் சொல்லலாம்.  ஒவ்வொரு ஆண்டும் அங்கே வந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் சொல்லுவதை செய்ய முடியாது என்று இந்த நாட்டின் மக்கள்   தேர்ந்தெடுத்திருக்கக்கூடிய அரசை ஒவ்வொரு ஆண்டும் அவமதித்துவிட்டு செல்லக்கூடிய ஒரு நிலையை  பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

Advertisment

அதனால் தான்  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர்கள் உரையை சட்டமன்றத்தில் படிக்கவே வேண்டாம் என்று சொல்லி, அரசியலமைப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று   தீர்மானம் கொண்டு வந்திருக்கிறார். ரொம்ப நாளாக இன்னொரு தீர்மானத்தையும் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இந்த கவர்னரே வேண்டாம். அவர்களால் எந்த பயனும் இல்லை இது தான் திராவிட முன்னேற்ற கழகம் மிக நீண்ட நாட்களாக தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். இந்த நாட்டில் நாடு முழுவதும் இருக்கக்கூடிய கவர்னர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 700 கோடி செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

rn-ravi-smile

இந்த 700 கோடியை எத்தனையோ பிள்ளைகளுடைய படிப்பிற்கு அவர்கள் வாழ்க்கையை முன்னேற்றுவதற்கு செலவழிக்க முடியும். ஆனால் பாஜக இல்லாத ஒவ்வொரு ஆட்சியையும் கஷ்டப்படுத்த வேண்டும் அந்த மாநிலத்தை சேர்ந்த மக்களை அசிங்கப்படுத்த வேண்டும், அவமானப்படுத்த வேண்டும் என்று இந்த கவர்னர்களை, ஒன்றிய அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது” எனப் பேசினார். 

dmk kanimozhi Tanjore
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe