கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு விழாவில் முடிவுற்ற பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.12.2025) திறந்து வைத்தார். அதோடு, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினார். அப்போது அவர், “எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், சாதனைகள், ஒன்றிய அரசு வெளியிடும் தரவரிசைகள் எல்லாவற்றிலும், நம்பர் ஒன் ரேங்க் நாம் தான். உலக அளவிலான விருதுகள் என்று நெஞ்சை நிமிர்த்தி, காலரை தூக்கி நடப்பது போல, ரெக்கார்டு. தமிழ்நாடு இன்றைக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
நான் கேட்கிறேன் இதில் 5 சதவிகிதமாவது அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நடந்ததா? அவர்களால் சொல்ல முடியுமா. இது என்னுடைய ஒப்பன் சேலஞ்ச். தைரியம் இருந்தால் சொல்லுங்கள். 5 சதவிகிதம் கூறுங்கள். பத்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில், பாழாய் போன தமிழ்நாடு, திராவிட மாடலின் நான்காண்டு காலங்களில், துள்ளிக் குதித்து இன்றைக்கு எழுந்திருக்கிறது” எனப் பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ரிப்பன் வெட்டி ஸ்டிக்கர் ஒட்டுவதையே 95% வேலையாகக் கொண்ட நீங்கள், 5% திட்டங்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்கலாமா?.
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களே - நீங்கள் மூச்சு இரைக்க வாசித்த பட்டியல் என்பது, நீங்கள் நடத்திய போட்டோஷூட்களின் பட்டியல். இதேபோல், நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனையை நிறைவேற்றினீர்கள் என்பதையும் இதேபோல் வாசிக்கத் தயாரா? (கவலை வேண்டாம். மூச்சு இரைக்க வாய்ப்பே இல்லை!). அப்புறம்... ஏதோ ஓபன் சேலஞ் (Open challenge) என்று சொன்னீர்களே... பல ஆண்டுகளாக உங்களுக்கு நான் வைத்த ஒரு ஓபன் சேலஞ்ச் பெண்டிங்கில் (Pending) இருக்கிறது. என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?. அதிமுக ஆட்சி பற்றி நீங்கள் என்ன கேட்டாலும் நான் பதில் சொல்லத் தயார். திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/27/mks-eps-mic-2025-12-27-19-42-30.jpg)
இது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி.யிடம் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்துப் பேசுகையில், “ஸ்டிக்கர் ஓட்டியவர்கள் யார் என்று நன்றாகத் தெரியும். உலகம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்டி பெருமை பெற்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு இருக்கக்கூடிய வேலைப் பளுவிற்கு இடையே எடப்பாடி பழனிசாமி உடன் எல்லாம் விவாதித்து முடியாது. கட்சியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அவரோடு விவாதிக்கத் தயாராக இருப்பார்கள். அவர்களோடு எடப்பாடி பழனிசாமி விவாதிக்கட்டும். அதெல்லாம் தாண்டி சில கேள்விகள் இருந்தால் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிச்சயமாகப் பதில் அளிப்பார்” எனப் பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/27/kanimozhi-mp-pm-2025-12-27-19-41-39.jpg)