சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா விமர்சையாக தொடங்கியுள்ளது.
இக்கோவில் ராமாயண வரலாற்று சிறப்பு கொண்ட கோவில் என கூறப்படுகிறது. கோவிலில் ஆனி தேரோட்டம் என்பது விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சில ஆண்டுகளாகவே இக்கோவிலின் தேர் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்ததால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்தாண்டு மதுரை உயர்நீதிமன்றம் தேர் அரசு ஓட்டுமா? அல்லது ராணுவத்தை வைத்து நாங்களே ஒட்டிக்கொள்ளவா? என கேள்வி எழுப்பி இருந்தது. அதனையொட்டி கடந்தாண்டு தேரோட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தேரோட்டம் தொடங்கியுள்ளது. கண்டதேவி கோயில் தேரோட்டத்தையொட்டி சுமார் 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.