Advertisment

“நாய் வாலாட்டலாம், வால் நாயை ஆட்டக்கூடாது” - கனல் கண்ணன் பேச்சு

kanal

சென்னையில் இந்து முன்னணி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி ஒன்று இன்று (08-11-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட சண்டைப் பயிற்சியாளரும், பா.ஜ.க நிர்வாகியுமான கனல் கண்ணன் கலந்து கொண்டு பேசினார்.  

Advertisment

அப்போது அவர், “இந்து சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் . இந்த பாரத நாட்டில் முதலில் தோன்றிய ஆதாரமாக இருப்பது இந்து  மதம். பாரதம் என்றாலே இந்து தான். பாரதத்தில்  இதிகாசம் சொன்னால் ராமாயணம் மகாபாரதம் தான்.   பிரதமர் மோடியை புகழ்ந்து காட்டும்  காலம் வந்துவிட்டது. இந்த திராவிட கட்சிகள் நம் நாட்டில்  தோன்றியதோ அப்போது மதம் என்ற விஷயத்தை  அழிக்க தொடங்கிவிட்டார்கள்.  அதற்கு காரணம் நாம்தான், நம்மிடம் இந்த  உணர்வே இல்லாமல் போனது தான்.

Advertisment

அந்த உணர்வு  கொஞ்சம் இருந்திருந்தால்  இன்றைக்கு இந்த கோயில்களுடைய விஷயங்களும் , கோயிலுடைய நிலங்களும், நம்முடைய மத  நம்பிகளும் சிதைக்காமல் இருந்திருக்கும்.   நிறைய பேசலாம்.  பேசினால் கைது செய்து விடுவார்கள். ஏனென்றால் முதலில் ஈ.வெ.ராவை பற்றி பேசினேன், கைது செய்து உள்ளே வைத்துவிட்டார்கள் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்னொரு அயோக்கியர்கள் என்று ஒரு ட்வீட் போட்டேன். அதற்கு ஒரு 6 கேஸ் போட்டாங்க.

அதனால் கேஸ் நமக்கு முக்கியமில்லை.   நாம் இந்துத்துவா, இந்த இந்துத்துவா வலிமையான நாடு வாழ வேண்டும். அதற்கு மற்ற மதத்தை புண்படுத்தவில்லை. நம்மை சுரண்டினால் தான் அவர்களை புண்படுத்துவோம். மைனாரிட்டி, மைனாரிட்டி என்று நம்மை சுரண்டுகிறார்கள். அதாவது நாய் தான் வால் ஆட்டணும், வால் நாயை ஆட்டக் கூடாது. திமுகவில் இப்போது வால் நாயை ஆட்டிட்டு இருக்கிறது” என்று கூறினார். 

HINDU MUNNANI kannan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe