Kamaraj's granddaughter V.S. Kamalika appointed as National Secretary of All India Mahila Congress
அகில இந்திய மகிளா காங்கிரஸில் புதிய பொதுச் செயலாளர்கள், செயலாளர்கள் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளா்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நியமனம் செய்து அறிக்கை வெளியிட்டுள்ளாா்.
இதில், தமிழகத்தை சோ்ந்த வி.எஸ். கமலிகா காமராஜ் தேசிய செயலராக நியமிக்கப்பட்டு உள்ளாா். கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வரும் அவா், தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர், மகிளா காங்கிரஸ் மாநில பொருளாளா் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளாா். இவர் தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் சகோதரி வழி பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வி.எஸ்.கமலிகா கூறுகையில், ‘இந்தியாவின் விடிவெள்ளி ராகுல்காந்தி எம்.பி. மற்றும் தேசிய செயலாளராக என்னை நியமித்த தேசிய மகிளா காங்கிரஸ் தலைவி அல்கா லம்பாஜி ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் இப்பொறுப்பபுக்கு என்னை பரிந்துரை செய்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்’ எனத் தெரிவித்தார்.
Follow Us