தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை திமுக குழுவினர் ஒதுக்கியுள்ளனர். அதனை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் திமுக குழு முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போது மக்கள் நீதி மய்யம் போட்டியிட விரும்பும் 12 தொகுதிகள் அடங்கிய விருப்ப பட்டியலை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (06-03-26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருகிற சட்டமன்றத் தேர்தலில், எத்தனை தொகுதிகளில் போட்டியிட வேண்டும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எத்தனை ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய தயாராக உள்ளோம். கூடுதல் தொகுதியா? தனிச் சின்னமா என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். இரட்டை இலக்கத்தில் தொகுதியை எதிர்ப்பார்க்கிறோம். திமுகவின் அழைப்பிற்காக காத்திருக்கிறோம்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/mnm-2026-03-06-18-30-54.jpg)