நாடாளுமன்ற இரு அவைகளிலும் நடப்பாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், மாநிலங்களவையில் கடந்த 4ஆம் தேதி பேசினார்.
அப்போது அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுக்கும் வகையில், “நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றது கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சைக்குவளை பெரும் உண்டியலானது. அந்த உண்டியலை உடைத்த நிதி திரட்ட உதவுவோர், இன்று தமிழை பார்த்து என்ன சொல்லுகிறீர்கள் தமிழ் பிச்சை எடுக்க கூட உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மை தான். தந்தாய் தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில் இந்தியில் பிச்சை எடுக்கலாமே... தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான், அதுவும் உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும் நாட்டையும் இந்த கமல்ஹாசன் விற்கவே மாட்டான். உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. உங்களுக்கு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் நீங்கள் உணர என் திட்டத்தை சாபமாய் போடுகிறேன். கருணையுடன் நீங்களே ஏற்பீர். உங்கள் இஷ்ட தெய்வங்களை வேண்டிக் கொள்ளுங்கள்.வீழ்க வளமுடன் தமிழ் என்றும் வாழும் நலமுடன்” என்று கூறினார். மாநிலங்களவையில் கமல்ஹாசனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறி வருகிறது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தான் பேசிய பேச்சு குறித்து கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று (06-02-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கமல்ஹாசன், “நல்ல கருத்து விவாதத்திற்கு உள்ளாக வேண்டும். தமிழனாக நான் நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்கு தோன்றுகிறது. அதை மறுப்பவர்கள் விவாதிக்க வேண்டும். விவாதித்து உண்மை என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது ஜனநாயகம், இப்படி தான் இருக்கும். விவாதங்கள் தொடர வேண்டும். என்னுடைய கூட்டணி மொத்த இந்தியாவுடன் தான். இந்தியா தான் என்னுடைய நலன். கூட்டணி எல்லாம் 5 வருடத்துக்கு ஒரு முறை செய்வது, சித்தாந்தம் தான் முக்கியம். அதை நோக்கி தான் நான் படித்தேன்” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/kamalch-2026-02-06-17-32-30.jpg)