2021, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 90 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisment

2021 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருது நடிகை சாய் பல்லவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு நடிகர் விக்ரம் பிரபு, நடிகை ஜெயா, பாடலாசிரியர் விவேகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுக்கு இசையமைப்பாளர் அனிருத், நடிகர் மணிகண்டன், ஸ்வேதா மோகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழக அரசின் எம் எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் கே.ஜே.யேசுதாஸ் பெறுகிறார்.