கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நபிகள் நாயகம் 1500வது பிறந்த தின மீலாது விழா, சிராஜுல் மில்லத் நூற்றாண்டு விழா, மஹல்லா ஜமாத் மாநாடு விளக்க பொதுக் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு முஸ்லிம் லீக் நிர்வாகி அன்வர் அலி தலைமை தாங்கினார். நகர செயலாளர் மகபூப் உசேன் அனைவரையும் வரவேற்றார். ஜமாத்துல் உலமா சபை நகர தலைவர் முஹம்மதுரப்பானி, லப்பைத்தெரு பள்ளிவாசல் நிர்வாகிகள் முஹம்மது ஹலீம், ஜாக்கீர் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநில துணைத் தலைவர் மூசா மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் அரங்க தமிழ் ஒளி, காங்கிரஸ் தலைவர் மக்கீன், திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முஸ்லீம் லீக்கின் மாநில துணைச் செயலாளர் அப்துல் ரஹ்மான் ரப்பானி, திருச்சி மௌலவி ஹாபிஸ் ஃகாரி இல்யாஸ் அன்வாரி மற்றும் இறைபணி திருக்கூட்டம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள் சமய நல்லிணக்க உரையாற்றினார்கள்.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர், தகைசால் காதர் மொய்தீன் பேசுகையில், “தமிழகத்தில் திமுக அரசு மக்கள் நலன் சார்ந்து சிறப்பாக செயல்படுகிறது. வரும் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியடையும். சிதம்பரம் தேர்தலில் கடந்த தேர்தலில் 75 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் முஸ்லீம் லீக்கின் வேட்பாளர் வாங்கியுள்ளது சாதரண விசியம் இல்லை. தற்போது கூட்டணியில் சிதம்பரம் தொகுதி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட்டணி வெற்றிக்காக பாணியாற்றுவோம்” எனப் பேசினார். இதனையடுத்து நகர துணைத்தலைவர் அப்துல் ரியாஸ் நன்றி கூறினார்.
Follow Us