Ki. Veeramani extends greetings 2026 New Year Celebration
2026 ஆங்கிலப் புத்தாண்டு நாளை (01-01-26) உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்த தினத்தையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து கி.வீரமணி கூறுகையில், “விடைபெறும் 2025 ஆம் ஆண்டு, மக்களாட்சி மதச்சார்பின்மை சமூகநீதிக்கும் சவாலாக அமைந்த ஆண்டு. வரும் ஆண்டு (2026) புதியதோர் சமூகம் காணும் மானுட நேயம் சமூகநீதி பகுத்தறிவு சுயமரியாதைப் பொலிவு ஓங்கும் புத்தாண்டாக அமையட்டும். அனைவருக்கும் நமது மகிழ்ச்சி கலந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.
Follow Us