Advertisment

தி.மு.க. அரசின் பொருளாதாரக் கொள்கையை விமர்சித்த பிரவீன் சக்கரவர்த்தி; ஜோதிமணி எம்.பி. பதிலடி!

rahul-praveen-chakaravarthi-jothimani

திமுக துணைப் பொதுச்செயலாளரும், அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி., “அதிமுக ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருந்தது. திமுக அரசுதான் அதனை சீர்திருத்தி தமிழ்நாட்டை முன்னணிக்கு கொண்டு வந்ததது. தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது” எனக்  கூறியிருந்தார். இத்தகைய சூழலில் தான் இதனைக் குறிப்பிட்டு காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “அனைத்து மாநிலங்களையும் விட தமிழகம் தான் அதிக கடன் நிலுவையில் உள்ளது. 

Advertisment

2010 ஆம் ஆண்டில், உத்தரப் பிரதேசத்தின்  கடன் தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது. இப்போது, ​​உத்தரப் பிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் வட்டிச் சுமை (%) 3வது அதிகமாக உள்ளது. கோவிட்க்கு முந்தைய அளவை விட தமிழ்நாட்டின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி இன்னும் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் கடன் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது” எனக் குறிப்பிட்டிருந்தார். 

Advertisment

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான ஜோதிமணி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டை உத்தரப்பிரதேசத்துடன் ஒப்பிடுவது நியாயமற்றது. கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு, சமூக நீதி, நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் பயனுள்ள நலன்புரி விநியோகம் ஆகியவற்றில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாகும். உத்தரப் பிரதேசம் இன்னும் பெரும்பாலான மனித மேம்பாட்டு குறியீடுகளில் போராடி வருகிறது. அதே நேரத்தில் நிறுவன நிர்வாகத்திற்குப் பதிலாக "புல்டோசர் ராஜ்" மாதிரியை ஊக்குவிக்கிறது. கடனை விளைவுகளுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும். 

jothimani

தமிழ்நாட்டின் கடன்கள், வளர்ச்சி மற்றும் மனித மூலதனத்தை வலுப்படுத்தும் பள்ளிகள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து, மின் திறன், சமூகப் பாதுகாப்பு மற்றும் நீண்டகால உள்கட்டமைப்பு முதலீடுகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் நிதிக் கொள்கைகளும் முக்கியம். தமிழ்நாடு வரிகளில் முக்கிய பங்களிப்பாளராக உள்ளது, ஆனால் அதிகாரப் பகிர்வில் மிகக் குறைவாகவே பெறுகிறது, அதே நேரத்தில் உத்தரப் பிரதேசம போன்ற மாநிலங்கள் கணிசமாக அதிக பரிமாற்றங்களைப் பெறுகின்றன.

இயற்கை பேரிடர்கள் மற்றும்  எஸ்.எஸ்.ஏ. (SSA) போன்ற திட்டங்களில்  கூட, தமிழ்நாடு முறையான நிலுவைத் தொகைகள் மறுக்கப்படுவதையும் தாமதப்படுத்தப்படுவதையும் எதிர்கொண்டுள்ளது. சூழலுடன் கூடிய கடனைப் பற்றி விவாதிப்போம். வளர்ச்சி விளைவுகள், தனிநபர் குறிகாட்டிகள், வரி பங்களிப்பு எதிர் (vs) அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகத்தின் தரம் ஆகும். இந்த நடவடிக்கைகளால், தமிழ்நாடு மிகவும் முன்னேறி உள்ளது. நம் மாநிலத்தை வீழ்த்த வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

rahul-praveen-chakaravarthi-tvk-vijay-selvaperunthagai

முன்னதாக த.வெ.க தலைவர் விஜய்யை பிரவீன் சக்கரவர்த்தி சந்தித்து பேசியிருந்தார். அப்போது திமுகவுடன் தான் தங்களது கூட்டணி தொடரும் என காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவர்கள் கூறி வந்தனர். இத்தகைய சூழலில் தான் திமுக அரசின் பொருளாதார கொள்கை மீதுபிரவீண் சக்கரவர்த்தி விமர்சனம் செய்திருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

dmk congress debt dmk govt jothimani kanimozhi Praveen Chakravarty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe