இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், "வந்தே மாதரம்", "எஸ்ஐஆர்" உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பாராளுமன்றத்தில்ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சிகளிடையே கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதற்கிடையில், மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்து நிறைவேற்றி வருகிறது.  

Advertisment

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி எம் பி , இன்று நாடாளுமன்ற அவையில் "விக்ஸித் பாரத் சிக்ஷா அதிஷ்தான் மசோதா- 2025"  குறித்து பேசும் பொழுது, தொடர்ச்சியாக ஒன்றிய அரசு கொண்டுவரும் திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்படுவதை எதிர்த்து பேசினார். அதற்கு அவர் மூன்று காரணங்களையும் கூறினார். 

Advertisment

இது குறித்து அவர் பேசுகையில், முதல் காரணமாக,   நீங்கள் ( ஒன்றிய அரசு ) கொண்டுவரும் திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைக்கிறீர்கள், அது இந்திய அரசியலைமைப்பிற்கு ( பிரிவு 348(1)(பி) ) எதிரானது. மேலும் அந்த பெயர்கள்  எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, "நாங்கள் தமிழில் பேசினால் உங்களுக்கு புரியுமா ? அப்படி தான்  இருக்கிறது எங்களுக்கும்,  நீங்கள் அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைப்பது" என பேசினார். மேலும் இரண்டாவது காரணமாக சமஸ்கிருதத்தில் பெயர்வைப்பது என்பது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தை நிலைகுலையச் செய்வதாக  இருக்கிறது. அதோடுமட்டுமல்லாமல்  அது இந்தியாவின் பன்முகத் தன்மையை   சீர்குலைப்பதாகவும் இருக்கிறது.மூன்றாவதாக இந்த திட்டம் ஒன்றிய அரசிற்கு அதீத அதிகாரங்களை வழங்குவதன் மூலமாக, நிர்வாகத்தின் மீதான அத்துமீறலாகவும் இது இருக்கிறது எனவும் பேசினார்.