புதுக்கோட்டைக் கம்பன் நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கலைராஜன். இவர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கணினி மையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி அபர்ணா திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக உள்ளார். இவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகு கலைராஜனின் அம்மா தமிழ்செல்வி மட்டும் வீட்டில் இருப்பது வழக்கம். அதன்படி கடந்த வியாழக்கிழமை வழக்கம் போல கலைராஜனும் அபர்ணாவும் வேலைக்குச் சென்றுவிட்டனர். வீட்டில் இருந்த தமிழ்செல்வி பின்பக்கம் சென்று துணிகள் துவைத்துக் கொண்டிருந்தார்.
அப்போது முன்பக்கம் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது முன்பக்க கதவுகள் திறந்து கிடந்தது. கதவுகளை மூடிவிட்டு உள்ளே சென்ற போது பீரோ கதவுகள் திறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உள்ளே பார்த்த போது பீரோவில் ஒரு பையில் வைத்திருந்த 30 சவரன் தங்க நகைகளைப் பையோடு காணாமல் போய் இருந்தது தெரிய வந்தது. உடனே கலைராஜனும், தலைமை காவல் அபர்ணாவும் வீட்டிற்கு வந்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். தமிழ்செல்வி புகார் கொடுத்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது ஒரு இளம் பெண் நகை பையோடு செல்லும் காட்சிப் பதிவாகி இருந்தது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உத்தரவின் பேரில் டிஎஸ்பி பிருந்தா, ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. வீடியோவில் சிக்கியிருந்த பெண் ஏற்கனவே பல இடங்களில் நகைகள் திருடிய குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநிலம் கீரன் ஜானி (வயது 25) என்பது தெரிய வந்தது. அதனையடுத்து அந்த பெண்ணைப் பற்றிய தகவல்களைச் சேகரித்த தனிப்படை போலிசார் ஆய்வாளர் சுகுமாறன் தலைமையில் அந்தப் பெண்ணின் செல்போன் சிக்னலை வைத்து பின் தொடர்ந்து சென்று வேலுர் மாவட்டம் காட்பாடியில் வைத்து கைது செய்து அவரிடம் இருந்து 35 சவரன் தங்க நகைகள், 199 கிராம் வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/01/pdu-women-arrest-1-2026-02-01-08-41-04.jpg)
நகை திருட்டு நடந்து 2 நாளில் துரிதமாகச் செயல்பட்டு நகை திருடிய பெண்ணை கைது செய்து நகைகளையும் மீட்ட தனிப்படை போலிசாரை பாராட்டி வருகின்றனர். இந்தப் பெண்ணின் உறவினர்கள், ஒரு கும்பலாகத் தமிழ்நாட்டிற்குள் வந்து மாநிலம் முழுவதும் சென்று ஆள் இல்லாத வீடுகளில் நகை, பணம் திருடுவதை வழக்கமாக வைத்துள்ளனர் என்கின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/01/pdu-women-arrest-2026-02-01-08-40-27.jpg)