திருவாரூர் மாவட்டம் சித்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ். விஜயன். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இவர், தமிழ்நாடு அரசின் சிறப்பு டெல்லி பிரதிநியாகவும் திமுக மாநில விவசாய அணிச் செயலாளராகவும் உள்ளார்.

Advertisment

இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் வீடு உள்ளது. கடந்த நவம்பர் 28ஆம் தேதி அவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான சித்தமல்லிக்கு சென்றுள்ளனர். இன்று (01-12-25) தஞ்சாவூர் வீட்டிற்கு வந்த போது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 88 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டது தெரிய வந்தது.

Advertisment

நகைகள் திருட்டு போனது குறித்து ஏ.கே.எஸ் விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி காவல் நிலைய போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் ஆய்வு செய்தார். தடயவியல் சோதனைகள் செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களும் ஆய்வு செய்யது வருகின்றனர்.