வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே  பாலூர் கிராமத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆனந்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தினந்தோறும் பூஜைகள் செய்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி சாவியை எடுத்துச் சென்றுள்ளனர்.

Advertisment

இன்று காலை கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோயிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அம்மன் கழுத்தில் இருந்த மூன்று பொட்டு தாலி, செம்பு பாத்திரங்கள் மற்றும் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை 50 ஆயிரம் திருடு போயிருந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  ஊர் பொதுமக்கள்  உமராபாத் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். 

Advertisment

தகவல் அறிந்து வந்த உம்ராபாத் காவல்துறையினர், கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலி மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடியது யார் என்பது குறித்து  தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அம்மன் கழுத்தில் இருந்த மூன்று பொட்டு தாலி மற்றும் செம்பு பாத்திரங்கள் உண்டியல் காணிக்கை திருட்டு போன சம்பவம் பாலூர் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.