முன்னாள் முதல்வரும் அதிமுகவை தோற்றுவித்தவருமான எம்ஜிஆரின் 38வது நினைவு நாள் இன்று (24-12-25) தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிமுகவினர் மற்றும் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள், ரசிகர்கள் எம்ஜிஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில், தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் சென்னை மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையில் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Advertisment

அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அதிமுக மூத்த தலைவர் ஜெயக்குமாரிடம், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதற்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “இது மேல்மட்ட விஷயம். ஓபிஎஸ்ஸும், டிடிவி தினகரனும் ஒரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் முடிவு செய்வார். இந்த விஷயத்தில், நான் கருத்து சொல்ல முடியாது. லெட்ஸ் வெயிண்ட் அண்ட் சி (Let wait and see)” என்று கூறினார்.