Advertisment

துணை முதல்வருக்கு பதிலடி கொடுத்த ஜெயக்குமார்!

WhatsApp Image 2025-12-15 at 2.38.13 PM

வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் திருவிழாவையொட்டி அனைத்துக்  கட்சிகளும் கொண்டாட்ட மனநிலையில் பெரும் ஆரவாரத்தோடு தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் களத்தில் இரவு பகல் பாராமல் அயராது தேர்தல் பணியாற்றி வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சியான அதிமுக வும், இந்த முறை நிச்சயம் ஆட்சியை பிடித்தே தீரவேண்டும் என்ற முனைப்போடு,  தொடர்ச்சியாக களப்பணியாற்றி வருகிறது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், இந்த ஆண்டின் தொடக்கத்தில்  இருந்தே  தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அப்பரப்புரையில் தொண்டர்களின் எழுச்சி தங்களுக்கு உத்வேகம் தருவதாவும், இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

Advertisment

இதனைத்  தொடர்ந்து  தேர்தல் நடைபெற சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுகவில்  தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கான விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இங்கு வந்துள்ள அனைத்து தொண்டர்களின் முகத்திலும் இருக்கும் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிமுக தொண்டர்கள் எவ்வளவு உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும்  இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது. இந்த நம்பிக்கை நிச்சயம் அதிமுக வை இந்த தேர்தலில் வெல்ல வைக்கும் என பேசினார். அதோடு செய்தியாளர்  ஒருவர், அதிமுக இவ்வளவு வேகமாக தேர்தல் பணிகளை செய்கிறது. குறிப்பாக விருப்ப மனு விநியோகம் செய்கிறது என்ற கேள்விக்கு திமுக அமைச்சர் ரகுபதி அவர்கள், அக்கட்சியில் போட்டியிட ஆள் இருக்கிறார்களா இல்லையா ? என்பதை தெரிந்து கொள்ளவே அந்த விருப்ப மனு விநியோகம் இவ்வளவு சீக்கிரமாக நடைபெறுவதாக அதிமுக வை கிண்டல் செய்திருந்தது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த ஜெயக்குமார், அவர்கள் ஆமை வேகத்தில் செல்கிறார்கள், நாங்கள் குதிரை வேகத்தில் செல்கிறோம். அதில் அவர்களுக்கு என்ன வருத்தம் என பதிலளித்தார்.

Advertisment

மேலும் திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசும் பொழுது, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக-வை, அது ஒரு எஞ்சின் இல்லாத வண்டி என்று விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், தற்காலத்தில்  தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறி விட்டது, புல்லட் ரயில் வந்துவிட்டது. ஆனால் அவர் இன்னும் நீராவி என்ஜின் காலத்தில் இருப்பதைப் போல பேசுகிறார். இந்த பேச்சு அவர் முதலமைச்சரின் மகனாக இருந்தும்,  தற்காலத்தில் அப்டேட்டில் இல்லாமல் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது என்று கூறினார்.

jeyakumar Udhayanidhi Stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe