Advertisment

சங்கரன்கோவிலில் எகிறிய மல்லிகைப்பூ விலை!

Untitled-1
சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ வரத்து குறைவால் கிலோ 2500க்கு விற்பனை.
Advertisment

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகள் விளைவிக்கப்பட்ட பூக்களை சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்கின்றனர். பொதுவாக சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு கொண்டு வரக்கூடிய மல்லிகைப்பூ கிலோ ஒன்றுக்கு 500 முதல் தேவைக்கேற்ப விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம்.

Advertisment

சங்கரன்கோவில் சுற்றுப்பகுதிகளில் நிலவும் பனிமூட்டம் காரணமாகவும் அவ்வப்போது பெய்த சாரல் மழை காரணமாகவும் மல்லிகை பூவின் விளைச்சல் குறைந்தது. சங்கரன்கோவில் மலர் சந்தைக்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்ததால்  500 முதல் 1000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த மல்லிகை பூ இன்று 2500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

திடீர் விலையேற்றம் காரணமாக வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சங்கரன்கோவில் மலர் சந்தை விலை நிலவரம்

(கிலோ ஒன்றுக்கு)

மல்லிகை.          : 2200 to 2500

கனகாம்பரம்.   : 600

பிச்சி.                    : 600

கேந்தி.                 : 50

சம்பங்கி             : 80

ரோஜா.                : 180

கோழிக்கொண்டை: 60

jasmine flower SANGARANKOVIL
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe