Advertisment

ஜப்பான் நாடாளுமன்றம் கலைப்பு; பதவியேற்ற 3 மாதங்களுக்குள் பிரதமர் அதிரடி அறிவிப்பு!

japan

Japan's parliament dissolved

ஜப்பான் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலையடுத்து கௌ மேட்டோ கட்சியுடன் கூட்டணி அமைத்து லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமையிலான ஆட்சி அமைந்தது. இதையடுத்து இஷிபா என்பவர், அந்நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். இவர் மீது கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Advertisment

அதனை தொடர்ந்து கௌ மேட்டோ கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு கொடுத்த தனது ஆதரவை திரும்பப் பெற்றது. இதன் காரணமாக லிபரல் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து ஜப்பான் இனோவேஷன் கட்சியுடன் லிபரல் ஜனநாயகக் கட்சி கூட்டணியமைத்து ஆட்சியில் நீடித்தது. அதன்படி, லிபரல் ஜனநாயகக் கட்சியில் உள்ள சனே தகாய்ச்சி என்ற பெண், பிரதமராகப் பொறுப்பேற்றார். ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisment

இந்த நிலையில், தற்போது வழக்கம் போல நாடாளுமன்ற கூட்டத்த தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் போது நாடாளுமன்றத்தின் கீழ் அவையை பிரதமர் சனே தகாய்ச்சி கலைப்பதாக அதிரடியாக அறிவித்தார். 465 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற கீழ் அவையை கலைப்பதாக அறிவித்த பின்னர், லிபரல் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி கவிழ்ந்தது. இதனால், அந்நாட்டில் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதமராக பதிவியேற்ற மூன்று மாதங்களுக்குள் சனே தகாய்ச்சி ஆட்சியை கலைத்துள்ளார். இருப்பினும் அடுத்த மாதம் நடக்கும் பொதுத்தேர்தலில் மக்களைச் சந்தித்து மீண்டும் ஆட்சியமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Japan Parliament
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe