Advertisment

‘ஜனநாயகன்’ விவகாரம் : ராகுல் தெரிவித்த கருத்துக்கு பிரவீன் சக்ரவர்த்தி விளக்கம்!

praveen-chakravarthy-pm

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் சென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் விசாரணையில் யு/ஏ சான்றிதழ் வழங்கக்கோரி நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, நீதிபதி ஆஷா வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. 

Advertisment

மேலும் வழக்கு விசாரணையை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இதைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என மேல்முறையீடு மனுதாக்கல் செய்துள்ளதோடு அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேநேரம் தணிக்கை வாரியம் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்தது. இந்த வழக்கு ஜனவரி 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று தர மறுப்பதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.  இத்தகைய சூழலில் தான் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விஜய் பட விவகாரத்தில் ஆதரவு தெரிவிக்கும் வகையில் எக்ஸ் பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டிருந்தார்.

Advertisment

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்குக் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியில் உள்ள விழாவிற்காக வந்துள்ளார். அந்த விழாவை முடித்துவிட்டு அவர் திருப்பி டெல்லிக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார். இந்தியா கூட்டணி நல்ல பலமாகத் தான் இருக்கிறது. அதில் ஒன்றும் சந்தேகம் எதுவும் கிடையாது. ராகுல் காந்தி இன்றைக்குப் பதிவு செய்த செய்தியானது கூட்டணிக்கானது என்பது போன்று பார்க்கக் கூடாது. 

raghul-nilgiri-speech

ராகுல் காந்தி  என்ன சொல்கிறார் என்றால் இது மிக முக்கியமான பிரச்சனை. ஒன்றிய பாஜக ஆட்சியில் நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் (இன்ஸ்டிடியூஷனும்) ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்களும், எதிர்க்கட்சிகளுக்கும் எப்போதும் ஒரு பிரச்சனை கொடுத்து அவர்களின் வளர்ச்சியில் தடை போடுவதற்குப்  பயன்படுத்துகிறார்கள். அதற்கு எதிராக ராகுல் காந்தி இன்றைக்கு ஒரு ட்வீட் பதிவு செய்துள்ளார். அவர் தமிழ் பண்பாடு மீது தாக்குதல் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தீபாவளி ரிலீஸ், பொங்கல் ரிலீஸ் என்பது  பெரிய தமிழ்க் கலாச்சாரம் ஆகும். 

அது ஏன் இந்த பொங்கல் ரிலீஸுக்கு ஒரு படத்துக்கு மட்டும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் (இன்பர்மேஷன் பிராட்காஸ்டிங் மினிஸ்ட்ர்) யார் என்று எல்லாருக்குமே நன்றாகவே தெரியும். அவர் மூலமாக சென்சார் போர்டு ஒரு புதிய ஆயுதமாக ஆகிவிட்டுள்ளது. சென்சார் போர்டை பயன்படுத்தி அதற்குத் தடை ஏன் போட்டார்கள் என்று ராகுல் காந்தி கேட்டுள்ளார். இது மிக முக்கியமான பிரச்சனை” எனத் தெரிவித்தார். 

sc-1

மற்றொருபுறம் ஜனநாயகன் திரைப்பட தனிக்கை சான்றிதழ் தொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனம் மேல் முறையீடு  செய்த வழக்கு  உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 15ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. அதாவது ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் அன்று விசாரணைக்கு வர உள்ளது. அன்றையத் தினம் விசாரிக்க உள்ள வழக்கு பட்டியலில் இந்த வழக்கும் சேர்க்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசிக்ஹ் அமர்வில் விசாரணைக்கு வர உள்ளது. 

congress Jana Nayagan raghul gandhi Supreme Court Praveen Chakravarty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe