Advertisment

‘ஜன நாயகன்’ இசை வெளியீட்டு விழா; த.வெ.க கொடி காட்டிய ரசிகர் கைது!

malasia-tvk

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் தற்போது நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களாக நடந்து வரும் நிலையில் சுமார் 80 ஆயிரம் பேர் நிகழ்ச்சியைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு டிக்கெட் விற்பனை நடந்தது. 

Advertisment

நடிகர் விஜயின் கடைசிப் படம் என்பதால் அவரது கட்சியை வளர்க்கும் நிகழ்ச்சியாக நடத்த விழாக்குழு திட்டமிட்டிருப்பதை அறிந்த மலேசியா அரசு இசை வெளியீட்டு விழாவில் திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிகள் மட்டுமே இடம்பெற வேண்டும். அரசியல் பேசக்கூடாது. கட்சிக் கொடி, சின்னங்கள் எதுவும் எந்த இடத்திலும் இடம்பெறக் கூடாது. இந்த விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில்,  தற்போது நிகழ்ச்சி நடந்து கொண்டுள்ள நிலையில் திரைத்துறையினர் பாடல்கள் பாடி வரும் போது கூட்டத்தில் நின்ற ஒரு ரசிகர் உற்சாகத்தில் த.வெ.க கட்சிக் கொடியைத் தூக்கிப் பிடித்து ஆடியதை அங்குக் கண்காணித்துக் கொண்டிருந்தனர் போலீசார். அந்த இளைஞர் ஆடி முடித்ததும் கட்சி கொடியுடன் அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர் மலேசிய போலிசார். கட்டுப்பாடுகளை மீறிய ரசிகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்கின்றனர். இந்த வீடியோ தற்போது மலேசிய சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.

arrested AUDIO LAUNCH MALASIYA police tvk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe