ஜம்மு காஷ்மீரின் தலைநகர் ஸ்ரீநகர் அருகே நவகாம் என்ற இடத்தில் காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று (14.11.2025) நள்ளிரவு பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தாக முதில் கூறப்பட்டது. இந்த சம்பவத்தின் காரணமாக காவல் நிலையத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தன. அதோடு அருகில் உள்ள பல கட்டிடங்கள், வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் துறையின் வாகனங்கள் உள்ளிட்டவை தீப்பற்றி எரிந்து பலத்த சேதமடைந்தன.
இந்த சம்பவத்திற்கு காரணம் குண்டுவெடிப்பாக இருக்கலாம் என முதலில் சந்தேகம் எழுந்தது.இதற்கிடையே டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான வழக்கை நவகாம் காவல் துறையினரும் தீவிரமாக விசாரித்து வந்தனர். எனவே இந்த வெடிப்பு சம்பவம் தீவிரவாத தாக்குதலாக இருக்கலாமோ என்றும் முதலில் கருதப்பட்டது. முன்னதாக ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் ஒரு 360 கிலோ வெடிப்பொருள் பரிமுதல் செய்யப்பட்டது. இந்த வெடி பொருட்கள் நவகாம் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
இத்தகைய சூழலில் தான் நேற்று இரவு தடயவியல் துறையினர், காவல்துறையினர் ஆகியோர் தாசில்தார் முன்னிலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்ய சென்றனர். அப்போது தவறுதலாக வெடிப்பொருட்களை கையாண்டதில் வெடித்து இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் சுமார் 9 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும், 30 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் காவல் நிலையத்தில் நிகழ்ந்த பயங்கர வெடிவிபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Follow Us