உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்களால் இன்று (15-01-26) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையையொட்டி, அதிகாலையில் எழுந்த மக்கள் புத்தாடை அணிந்து, ஒவ்வொரு இல்லங்களிலும் வண்ணக்கோலமிட்டு பொங்கலிட்டு சூர்ய பகவானை வழிபாடு செய்து வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை களைகட்டியுள்ளது.

Advertisment

இந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். வாடிவாசலில் இருந்து சீறும் காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்கு பரிசுகளை அள்ளி செல்வார்கள். அதே போல், பிடிபடாத மாடுகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண ஏராளமான மக்கள் கூடி ரசிப்பார்கள். அந்த வகையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சியில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பல இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Advertisment

அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (15-01-26) தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். முன்னதாக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடி வீரர்கள் திருப்பி கூறினர். முதல் சுற்றில் விறுவிறுப்பாக காளைகளை வீரர்கள் பிடித்து தழுவி களம் கண்டு வருகின்றனர். இந்த போட்டியை அங்குள்ள மக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். இன்று நடைபெறும் இப்போட்டியில், 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகிறது. அதன் திமிலை பிடிக்க களமாட 550 காளையர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்ற சிறந்த மாடுபிடி வீரருக்கு ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசாக வழங்கப்படவுள்ளது.

இந்த பொங்கல் பண்டிகையை தொடர்ந்து நாளை (16-01-26) மாட்டுப் பொங்கலும், அதற்கு அடுத்த நாளான நாளை மறுநாள் (17-01-26) காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது.

Advertisment