கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஆடித் திருவாதிரை திருவிழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதற்காக இன்று (26/07/2025)  மாலத்தீவில் இருந்து  தூத்துக்குடிக்கு வரும் மோடி, பின்னர் அங்கிருந்து திருச்சி வர இருக்கிறார்.

தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவிற்காக பத்தாயிரம் பேர் அமரக்கூடிய வகையில் அரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா அரங்கில் ஒருபுறம் பாஜக தொண்டர்களும், அதேபோல மறுபுறம் திமுக தொண்டர்களும் இடம் பெற்றுள்ளனர். ஒரு பக்கம் உள்ள பாஜக தொண்டர்கள் மோடியை வரவேற்று கோஷம் எழுப்பி 'ஜெய் ஸ்ரீ ராம்' என கோஷமிட்டனர். அப்போது மறுபுறம் உள்ள திமுக தொண்டர்கள் 'முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்க'  என கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.