பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, காலிப் பணியிடங்களை நிரப்புதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கமான ‘ஜாக்டோ ஜியோ’ அமைப்பின் ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ ஜியோ ஊழியர்களும், தமிழக அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வந்த போதிலும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

Advertisment

இந்த சூழ்நிலையில், வரும் ஜனவரி 6ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் அறிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பிடன் தமிழக அமைச்சர்கள் இன்று (02-01-26) பேச்சுவார்த்தை நடத்தினர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளின் இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Advertisment

இந்த பேச்சுவார்த்தை முடிந்த பின்னர், பழைய ஓய்வூதியம் விவகாரத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர். இது தொடர்பாக, சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பழைய ஓய்வூதியம் தொடர்பான அனைவரும் மகிழக்கூடிய வகையில நாளை முதல்வர் அறிவிப்பை வெளியிடுவார் என்ற நல்ல செய்தியை அறிவித்தார். ஜாக்டோ ஜியோவை பொறுத்தவரை மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும் அமைச்சர் குழுவிடம் எடுத்து உரைத்திருக்கிறோம்.

நாளை அறிவிப்பை பார்த்துவிட்டு போராட்டத்தை துவங்குவதா? வாபஸ் பெறுவதா என்று ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூடி எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவிப்போம். ஜாக்டோ ஜியோவை பொறுத்தவரை முதல்வர் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். முதல்வரின் நாளை அறிவிப்பு அரசு ஊழியர்களுக்கான இனிப்பாக அறிவிப்பாக இருக்கும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

Advertisment