தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளை திமுக, அதிமுக ஆகிய இருபெரும் கட்சிகள் தொடங்கியுள்ளன. அந்த வகையில் கூட்டணி கட்சிகளுடன் இன்று (22.02.2026) முதல் தொகுதி பங்கீட்டு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படும் என திமுக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டது. அதாவது மக்களவை எம்.பி.யும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 

Advertisment

அந்த குழுவின் உறுப்பினர்களாக திமுக முதன்மைச் செயலாளாரும், அமைச்சருமான கே.என். நேரு, திமுக துணைப் பொதுச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி., துணைப் பொதுச் செயலாளர் ஆ. ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எ.வ. வேலு, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும் அமைச்சருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இத்தகைய சூழலில் தான் திமுக கூட்டணியில் முதல் கட்சியாக இந்தியன் யூனியன் முஸ்லீம் கட்சிக்கு திமுக அழைப்பு விடுத்திருந்தது. 

Advertisment

இதனையடுத்து இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் காதர் மைதீன் தலைமையில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட குழுவும், திமுக சார்பில் அமைக்கப்பட்ட 7 பேர் கொண்ட குழுவும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை முடிந்த பிறகு ஐ.யு.எம்.எல். தலைவர் காதர் மொய்தீன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “திமுகவிடம் 5 தொகுதிகள் ஒதுக்கக் கேட்டுள்ளோம். குறைந்தபட்சம் 4 தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தியுள்ளோம்” எனத் தெரிவித்தார். 

dmk-india-union-muslim-league

அதனைத் தொடர்ந்து கதார் மொகிதீன் ஆங்கில ஊடக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அப்போது காதர் மொகிதீன் திடீரென மயக்கமடைந்தார். இதனையடுத்து, அங்கிருந்த ஆதரவாளர்கள் அவரை அண்ணா அறிவாலயத்திற்குள் கை தாங்கலாகத் தூக்கிச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

Advertisment